Rama Online Tamil: March 2018

Wednesday, March 28, 2018

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்-Health Benefits Of "FISH"

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்-Health Benefits Of "FISH"

கடல் உணவுகளில் மீன்கள் மிகவும் சிறப்பான ஒரு உணவு பொருள் மீன்கள் சாப்பிடுவதால் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமசத்துகள் இருப்பதோடு முக்கியமாக ஒமேகா-3 அதிக அளவு உள்ளது.இது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று,ஒமேகா-3 ஃ பேட்டி ஆசிட்டனது உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.


இது போன்ற சத்து,மற்ற உணவு பொருட்களை விட மீன்களில் தான் அதிகம் உள்ளது.இது போன்ற உணவு வகைகள் அதிகம் சாப்பிடுவதால் பல்வேறு கடுமையான நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கலாம்.


மீன் நமது உணவில் அதிகம் சேர்த்து வந்தால்இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பைகுறைக்கும் என்று பல்வேறு ஆய்வில் கூறுகின்றனர்.அதனால் மீன்களை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்வது ரொம்பவே நல்லது.

ஆஸ்துமா


ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்கலாம்,அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மீன் சாப்பிட பழகினால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.

மூளை மற்றும் கண்கள்


மீன்களில் இருகின்ற ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மூளை செல்கள் மற்றும் ரெட்டினவின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் மீன் சாப்பிடுவது கண்களுக்கு ரொம்பவுமே நல்லது.மீன்கள் சிறு வயதில் இருந்து சாப்பிட்டு வந்தால் மூக்குகண்ணாடி போடும் அவசியம் இருக்காது.

கொலஸ்ட்ரால்


மீன் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள அதிகபடியான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகபடியாக நிறைந்துள்ளது.

பார்வைகோளறு


தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்,மீனை அதிகமாக சாப்பிட்டு வந்தால்குழந்தைகளுக்கு தாய்பால் மூலம் ஒமேகா ஃபேட்டி ஆசிட்டானது அதன் வழியாக சென்று தெளிவான பார்வையை கொடுக்கும்.

இதயநோய்


வாரத்திற்கு ஒரு முறை மீனை தவறாமல் சாப்பிட்டு வந்தால்,இதயம் சீராக இயங்குவதோடு பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

நீரழிவு


நீரழிவு நோய் உள்ளவர்கள் மீனை உணவில் வாரம் ஒரு தவறாமல் சேர்த்து வர ,இரத்தத்தின் உள்ள சக்கரையின் அளவை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.

புற்றுநோய்


ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டனது உடலில் சீரான அளவில் இருந்தால் பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30-50 சதவீதம் குறைக்கலாம் அதிலும்குடல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,ப்ரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றின் தாக்கத்தை குறைக்கலாம்.

ஞாபகமறதி


நிறைய பேருக்கு வயது ஆக ஆக ஞாபகமறதி அதிகம்  ஏற்படும் இதை தடுபதற்கு வாரம் ஒரு முறை மீனை உணவில் சேர்த்து வந்தால் முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்கலாம்.

Tuesday, March 27, 2018

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்-Health Benefits Of Eating Eggs

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்-Health Benefits Of Eating Eggs

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவு பொருட்கள் இருந்தாலும் முட்டைக்கு இணையாகாது,ஏன் என்றால் முட்டையில் அந்த அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.இது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது.


குறிப்பாக முட்டையில்,

* புரோடீன்
*வைட்டமின்
*அமினோ ஆசிட்
*ஒமேகா-3 ஃபேட்டி ஆசிடுகள்   போன்றவை நிறைந்துள்ளது.

 #அதுமட்டுமல்லாமல் மற்ற உணவு பொருட்களில் இல்லாத "கோலைன்" என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளன.

#எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது உடம்பிற்கு மிகவும் நல்லது.

#அதிலும் முட்டையை குறைந்தது 5 நிமிடம் வேக வைத்து சாப்பிடுவது இன்னும் நல்லது,முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிட கொடுத்தல் அவர்களுக்கு வளர்ச்சி சீராகவும்,ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.


முட்டையின் நன்மைகள்:

- இரத்த கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்கும்.

-எடையை பராமரிக்கும்.

-கண் ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும்.

-உடல் கட்டமைப்பு.

-ஆரோக்கியமான இதயம்.

-பாலுணர்ச்சியை அதிகரிக்கும்.

- ஆரோக்கியமான மூளை.

- புற்றுநோய் வராமல் தடுக்க உதவியாக இருக்கும்.

-முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு ரொம்பவும் நல்லது.

-வலிமையான எலும்புகள்.

- நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக முட்டையில் உள்ளது.

-ஆரோக்கியமான முடி மற்றும் நகம்.

இது அனைத்தும் உடம்பிற்கு தேவையான அனைத்து சத்துகளையும் நமக்கு வளமாக முட்டையில் இருந்து கிடைக்கிறது.அதிலும் நமது ஊரில் கிடைக்கும் நாட்டுகோழி முட்டை ரொம்பவும் நல்லது.

Monday, March 26, 2018

சிறுநீரக கல் இரண்டு நாட்களில் கரையும்/Remove Kidney stone with in Two days

சிறுநீரக கல் இரண்டு நாட்களில் கரையும்/Remove Kidney stone with in Two days

இன்றைய உணவு பழக்கத்தினால் சிறுநீரக பிரச்சனை என்பது பெரும்பாலனவர்களுக்கு பெரும் பிரச்சனையா இருக்கு,கிராம மக்களைவிட நகரத்தில் வாழும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனைகள் அதிகம் இருக்கு அதாவது இது முதலில் முதுகு வலியில் ஆரம்பித்து பின்பு வலி அதிகம் ஆகும் போது தெரியும் இது முதுகு வலி இல்லை,சிறுநீரக கல் பிரச்சனை என்று இதன் வலி சொல்ல முடியாது அந்த அளவுக்கு வலி அதிகமாக இருக்கும்.

இதற்கு சரியான தீர்வு பீன்ஸ் வைத்தியம் மிகவும் சிறந்த ஒன்று.



பீன்ஸ் எப்படி சாப்பிடுவது?

1/4 கிலோ பிரஞ்சு பீன்ஸ் அதன் விதையை நீக்கிவிட்டு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்,குறைந்தது 2 மணி நேரம் கொதிக்க விடவேண்டும்.பிறகு தண்ணீரை வடிகட்டுவிட்டு பீன்ஸ்ஸை மிக்ஸியில் நன்றாக அரைத்து குடிக்க வேண்டும்.

குடித்த பின்னர் 1௦ நிமிடம் கழித்து 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்,ஒரே முறையில் குடிக்க முடியவில்ல என்றால் கொஞ்சம் நேரம் கழித்து குடிக்க வேண்டும் ஆனால் கண்டிப்பாக 2லிட்டர் தண்ணீர் குடித்துவிடுங்கள்,இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் இன்னும் நல்லது.பின்பு சிறுநீர் வழியாக கல் வெளியாகிவிடும்.

கல் இருப்பவர்கள் இல்லாதவர் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்,கல் இருப்பவர்கள் குடித்தால் கல் கரையும் இல்லாதவர்கள் குடித்தால் கல் வராமல் தடுக்கலாம்.


சிறுநீரக கல் வராமல் தடுக்க!!!

* துளசிஇலை சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உடைவதற்கு உதவியாக இருக்கும்.

*வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கலாம்,அதுமட்டுமல்லாமல் கல் உடைய இந்த வாழைத்தண்டு ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும்.

               இவை அனைத்து நீங்கள் கடைபிடிப்பதன்மூலம் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம்,மேலும் இந்த கல் வருவதை தடுக்க தினமும் 3-5 லிட்டர் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்.

இது இயற்கை மருத்துவ முறை பக்கவிளைவுக்கு சாத்தியமே இல்லை.



Tuesday, March 20, 2018

Amazing Health Benefits Of Soaked Almonds

Amazing Health Benefits Of Soaked Almonds|ஊறவைத்த பாதம்க்குள்ள இவ்வளவு இருக்க ?

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதமில் நிறைய நன்மைகள் உள்ளன.இந்த நட்ஸ் உடல் மற்றும் சருமம் அதுமட்டும் அல்லாமல் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது.

பாதம்பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால்இதயநோய் வருவதை தடுக்கலாம்,ஏனெனில் இதில் பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.அதுமட்டும் அல்லாமல் வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதம் சாப்பிட்டு வந்தால் 50% இதயநோய் வருவதை தடுக்கலாம்.

பாதமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும்பாலிஅன்சாச்சுரேட்டட்  கொழுப்புகள் நல்ல அளவில் உள்ளது.தினமும் ஊறவைத்த 4 பாதம் சாபிட்டால் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து கொள்ள உதவும்.

இரத்தஅழுத்தம்

பாதமில் சோடியம் குறைவாகவும்,பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளத்தால் இரத்த அழுத்தத்தை கட்டுபாட்டுடன் வைத்துகொள்ள உதவுகிறது.

புற்றுநோய்


நார்சத்து அதிகம் இருக்கும் பாதமை சாபிட்டால் அது குடலியக்கம் சீராக செயல்பட உதவுவதோடு புற்றுநோய் உண்டாவதை தடுக்கும்.அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் ஈ பைடோ கெமிகல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால்,மார்பக புற்றுநோய் உண்டாவதை தடுக்கும்.

சீரான இரத்தஓட்டம்


மக்னீசியம் பாதமில் அதிகம் இருப்பதால் இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துகொள்ள உதவுவதோடு மேலும் இரும்புசத்து இருப்பதால் இரத்தனுக்களின் அளவைஅதிகரிக்கவும் உதவும்.

வலுவான எலும்புகள் பற்கள்


பாதமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால்,மூட்டுவலி வராமல் தடுத்து எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக்கும்.

எடை குறையும்


பாதமில் நார்சத்து அதிகம் இருப்பதால் அது உடலின் கலோரியின் அளவை கட்டுபடுத்தி,உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.மேலும் இதில் உள்ள புரோடீன் வயிற்றை நிறைத்து அடிகடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

நீரழிவு


பாதமில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் ஆய்வு ஒன்றில் பாதம் சாப்பிட்டால் உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சக்கரையின் அளவை குறைத்து சீராக வைக்கிறது.

எனர்ஜி


பாதமில் உடலில் எனர்ஜியை அதிகரிக்கும் கனிமங்கள் ஆனா மாங்கனீசு,காப்பர் அதிகளவு உள்ளத்தால் இது எப்போதும் எனர்ஜியுடன் இருக்க செய்கிறது.

ஆரோக்கியமான மூளை


தினமும் காலை ஊறவைத்த 5 பாதம் சாப்பிட்டு வந்தால் மூளையின் சக்தி அதிகரிக்க உதவியாக இருக்கும்.

மலசிக்கல்


பாதாமில் அதிகபடியான நார்சத்து இருப்பதால் அது செரிமான மண்டலத்தை சீராக இயக்கி மலசிக்கல் வராமல் சரிசெய்யும்.மேலும் பாதாமில் நல்ல அளவு மாய்ஸ்சுரைசிங் தன்மை இருப்பதால் அது முகபரு,கரும்புள்ளி,போன்றவை போக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவியாக இருக்கும்.

Monday, March 19, 2018

Natural Way To Grow Beard and Moustache Faster

இயற்கையாக தாடி ,மீசை வேகமாக வளரவேண்டுமா !!!


ஆண்கள் அதிகமாகவே தாடி மீசையை விரும்புவர்கள் அதிலும் அதிகமாகவே இருக்கணும்னு நினைப்பவர்கள் ஆனால் சில ஆண்களுக்கு எதிபார்த்த அளவுக்கு தாடி,மீசை வருவதில்லை ஏன் என்றால் அவர் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் இன்னும் சில அப்படி இயற்கையாகவே சரியாக வளரவில்லை என்றால் அதே இயற்கையாகவே வளர்வதற்கு சில வழிகள் உண்டு அதை பாப்போம்.


இயற்கையாகவே தாடி மீசை வேகமாக வளர:

1.முகத்தை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.



*உங்கள் முகத்தை எப்போதுமே சுத்தமாக பொலிவுடன் வைத்துகொள்ள வேண்டும்,முகத்தை சுடு தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்,காலை மற்றும் மாலை இரண்டு வேலைகளிலும் சுடு தண்ணீரால் சுத்தம் செய்வது நல்லது அது உங்கள் முகத்தை சுத்தம் செய்து தேவையற்ற அழுக்கை வெளியேற்றும்.

*நீங்கள் எப்பொழுதும் பொடுகு நீக்கும் சாம்பு பயன்படுத்துங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்துவது நல்லது.

*உங்கள் முகத்திற்கு எப்போதும் ஈரப்பதம் இருக்கும் முகக்ரீம் பயன்படுத்துவது நல்லது.

2.முகமசாஜ்.


நம் முகத்தை எப்போதும் இல்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போது முகத்திற்கு சின்ன மசாஜ் செய்வது நல்லது அது உங்கள் முகத்தை மெருதுவாகவும் முகத்தோல் கருமையாகாமல் பாதுகாக்கும்.

*முடிந்தவரை அதிகளவு குளிர்ந்த இடத்துக்கு அடிகடி சென்றுவருவது நல்லது.

*உடலளவும் மனதளவும் எந்தவித கவலை இல்லாமல் இருந்தாலே உடலில் உள்ள தேகங்கள் குளிர்ந்து ரோமங்கள் வளர உதவியாக இருக்கும்.

3.தேவையான தூக்கம்.


*நமக்கும் தேவையான முறையான தூக்கம் ரொம்பவுமே முக்கியம் அது இரத்த ஓட்டத்தை முறையாக செயல்படவும் முடி வளர தூக்கம் பெரிதும் உதவியாக இருக்கும்.

*முறையான தூக்கம் இல்லை என்றால் உடம்பில் உள்ள செல்கள் பாதிப்படையும்,தினமும் குறைத்து 6 மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக தேவை,இது உங்களுக்கு முகத்தில் முடி வேகமாக வளர உதவியாக இருக்கும்.

4.முறையான உடற்பயிற்சி.


* தினமும் கலையில் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி தேவை கட்டாயம்.

* உங்களது முறையான உடற்பயிற்சி உடம்பில் உள்ள அனைத்து செல்களையும் சீராக இயங்குவதோடு இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

*தினமும் 20 இருந்து 30 நிமிடம் நடைபயிற்சி அல்லது மிதமான ஓட்டம் தேவை.

5.புகைபிடித்தல் கூடாது.


*புகை பிடிப்பதால் உடம்பில் உள்ள செயல்பாடுகள் குறைந்து முடி வளர்வதை தடுக்கும் புகை உடம்புக்கு சூடு என்பதால் புகை பழக்கத்தை தவிர்க்கவும்.

*பொதுவாகவே புகை பிடித்தல் இரத்த ஓட்டத்தின் தன்மையை குறைய செய்கிறது

6.வைட்டமின்கள்


* தேவையான வைட்டமின்கள் உள்ள உணவு எடுத்துகொள்ள வேண்டும் உதரணமா வைட்டமின் B காம்ப்ளெக்ஸ்.

*முடிந்தவரை உடம்பிற்கும் தேவையான வைட்டமின் A,C மற்றும் E எடுத்துகொள்ளுங்கள்.








Saturday, March 17, 2018

Health benefits of Drinking Water

தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்-Benefits of drinking water.

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்துல நாம் அனைவரும் போதுமான தண்ணீர் எடுத்துகொள்வதில்லை ஏன் என்று பார்த்தல் நமக்கு அந்த அளவு நேரம் கிடைக்கறது இல்லை.மருத்துவரின் ஆலோசனைபடி பார்த்தல் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் அவசியம் எடுத்துகொள்ளவேண்டும்,யாராவது அவ்வளவு தண்ணீர் குடிகிறோமா! இல்லை!

இதோட,அவசியம் தெரியாது தண்ணீர் சரியான அளவு இல்லன பல உடல் ரீதியான பிரச்சனைகள் வர நிறையவே வாய்ப்பு இருக்கு.


பொதுவா நமது உடலில் 80% தண்ணீர் நிறைந்துள்ளது,இந்த தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம்.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

1.நமக்கு போதுமான அளவு எனர்ஜி கிடைக்கும்.

2.உடம்புல தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும்.

3.உடல் வெட்பத்தை சீராக வைத்துகொள்ள தண்ணீர் ரொம்பவுமே முக்கியம்.

4.முறையான குடலியக்கம் இல்லனா நிறைய பேருக்கு மலசிக்கல் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

5.மூளையில் 90% அளவு தண்ணீர் தான் இருக்கும் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் தலைவலி ,சோர்வு,போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

6.தண்ணீர் அதிகமா குடிப்பது நமது வயறு நிறைவதோடு,எடைகுறையவும்,மெட்டபாலிசம் அளவை அதிகரிக்க  உதவிய இருக்கும்.

7.தண்ணீர் அதிகமாக எடுத்துகொள்வதால் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துகொள்ள உதவும்,அதுமட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் ஏற்படும் கல் வருவதை முற்றிலும் தடுக்கிறது.

Friday, March 16, 2018

WELCOME POST

ராமா ஆன்லைன் தமிழ்


உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ப்ளாக் தமிழ் மக்களுக்காக ஆரம்பமானது அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தர வேண்டும்

அனைத்து விதமான செய்திகளை இந்த ப்ளாக் மூலம் தெரிந்துகொள்ளலாம்.




வணக்கம்

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...