மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்-Health Benefits Of "FISH"
கடல் உணவுகளில் மீன்கள் மிகவும் சிறப்பான ஒரு உணவு பொருள் மீன்கள் சாப்பிடுவதால் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமசத்துகள் இருப்பதோடு முக்கியமாக ஒமேகா-3 அதிக அளவு உள்ளது.இது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று,ஒமேகா-3 ஃ பேட்டி ஆசிட்டனது உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.
இது போன்ற சத்து,மற்ற உணவு பொருட்களை விட மீன்களில் தான் அதிகம் உள்ளது.இது போன்ற உணவு வகைகள் அதிகம் சாப்பிடுவதால் பல்வேறு கடுமையான நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கலாம்.
மீன் நமது உணவில் அதிகம் சேர்த்து வந்தால்இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பைகுறைக்கும் என்று பல்வேறு ஆய்வில் கூறுகின்றனர்.அதனால் மீன்களை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்வது ரொம்பவே நல்லது.
ஆஸ்துமா
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்கலாம்,அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மீன் சாப்பிட பழகினால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.
மூளை மற்றும் கண்கள்
மீன்களில் இருகின்ற ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மூளை செல்கள் மற்றும் ரெட்டினவின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் மீன் சாப்பிடுவது கண்களுக்கு ரொம்பவுமே நல்லது.மீன்கள் சிறு வயதில் இருந்து சாப்பிட்டு வந்தால் மூக்குகண்ணாடி போடும் அவசியம் இருக்காது.
கொலஸ்ட்ரால்
மீன் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள அதிகபடியான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகபடியாக நிறைந்துள்ளது.
பார்வைகோளறு
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்,மீனை அதிகமாக சாப்பிட்டு வந்தால்குழந்தைகளுக்கு தாய்பால் மூலம் ஒமேகா ஃபேட்டி ஆசிட்டானது அதன் வழியாக சென்று தெளிவான பார்வையை கொடுக்கும்.
இதயநோய்
வாரத்திற்கு ஒரு முறை மீனை தவறாமல் சாப்பிட்டு வந்தால்,இதயம் சீராக இயங்குவதோடு பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
நீரழிவு
நீரழிவு நோய் உள்ளவர்கள் மீனை உணவில் வாரம் ஒரு தவறாமல் சேர்த்து வர ,இரத்தத்தின் உள்ள சக்கரையின் அளவை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.
புற்றுநோய்
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டனது உடலில் சீரான அளவில் இருந்தால் பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30-50 சதவீதம் குறைக்கலாம் அதிலும்குடல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,ப்ரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றின் தாக்கத்தை குறைக்கலாம்.
ஞாபகமறதி
நிறைய பேருக்கு வயது ஆக ஆக ஞாபகமறதி அதிகம் ஏற்படும் இதை தடுபதற்கு வாரம் ஒரு முறை மீனை உணவில் சேர்த்து வந்தால் முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்கலாம்.
No comments:
Post a Comment