Rama Online Tamil: கீரைகளை ஏன் சாப்பிடனும் தெரியுமா ?

Monday, May 14, 2018

கீரைகளை ஏன் சாப்பிடனும் தெரியுமா ?

கீரைகளை ஏன் சாப்பிடனும் தெரியுமா ?

நமது உணவு பழக்க வழக்கங்களில் முக்கியமானதாகவும் அதிக சத்துக்களை நமக்கு தரக்கூடிய ஒரு உணவு பொருள் கீரைவகைகள்.அப்படிப்பட்ட கீரைகளை நாம் ஏன் சாப்பிடவேண்டும் அதை நாம் ஏன் வெறுக்க கூடாது அதைப்பற்றி பார்ப்போம்.

நம் முன்னோர்கள் "உணவே மருந்து"மருந்தே உணவு என சொல்லியது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று அப்படிப்பட்ட வரிசையில் கீரையும் ஒன்று மற்றும் உணவில் காய்கறிகள் கீரை வகைகள் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் நமக்கு ஆலோசனை கொடுப்பார்கள்.

கீரைகள் நமக்கு நிறைய நன்மைகளை தருகின்றது அப்படிப்பட்ட நன்மைகளை தரக்கூடிய கீரைகள் விளையும் குறைவு மற்றும் எளிதாக கிடைக்க கூடிய ஒன்று.அப்படிப்பட்ட கீரை வகைகளை தினசரி உணவில் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்லணும்.இந்த கீரை வகைகளை நாம் ஏன் சாப்பிடனும் தெரியுமா.

கீரைகள் எளிதாக செரிமானம் ஆககூடிய ஒரு சத்தான உணவு பொருள் கீரை வகைகள் பெரும்பாலும் 4௦ வகைகளுக்கு மேல் உள்ளது,ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு பலனை தரக்கூடிய ஒன்று அப்படி பார்க்கையில் முருங்ககீரை அதிகமாக இரும்புசத்து உள்ளது.

தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கீரை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது,அதிலும் 4௦ வயதிற்குமேல் பெண்கள் இதனை சேர்த்து கொண்டால் ஹீமோகுளோபின் பிரச்சனை,கால்சியம் குறைபாடு,மூட்டுவலி போன்ற பிரச்சனைக்கு கீரை நல்ல பலன் தரும்.

கீரைகள் அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டால் குழந்தைகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வாரம் இருமுறை சாப்பிடலாம் அப்படி இல்லை என்றால் ஒருமுறையாவது சேர்த்துகொள்வது அவசியம்.

எந்தவயதினர் கீரை சாப்பிடலாம்:


தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிகம் கீரைகளை விரும்பி சாப்பிடுவதில்லை ஏன் என்றால் பெரியவர்கள் வீட்டில் அதிகம் கீரை சமைத்து சாப்பிட விரும்புவது இல்லை,மாமிசத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அதைவிட சத்து அதிகம் இருக்கும் கீரைகளுக்கு கொடுப்பதில்லை.

பெரும்பாலும் சிலர் கீரையின் அவசியத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள் 8 மாதத்தில் இருந்தே கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்,சிலர் 1 வருடம் கடந்ததும் கீரையை நன்கு வேகவைத்து கொடுக்க பழகலாம் அப்படி குழந்தை பருவத்தில் இருந்தே பழகினால் பிற்காலத்தில் அவர்கள் கீரைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை விரும்பி சாபிடுவர்கள்.

கீரைகள் சாப்பிடும் முறை


கீரைகள் நமது உடலுக்கு நல்லது என்றாலும் எப்போதெல்லாம் இந்த கீரை வகைகளை சேர்த்து கொள்ளலாம்.

பெரும்பாலும் கீரை வகைகளை காலை வேளையில் உணவில் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது,அதிலும் பெரியவர்கள்,நோயாளிகள் கீரைகளை காலையில் சேர்த்து கொள்வது நல்லது.இரவு நேரங்களில் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் அப்படியே இரவு நேரங்களில் சேர்த்து கொள்வதாக இருந்தால் இரவு 8 மணிக்கு முன்பே சாப்பிடுவது நல்லது.1௦ அல்லது 11 மணிக்கு மேல் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.

இப்படிபட்ட கீரைகளை நாம் தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது அதுமட்டும் அல்லாமல் கீரையை சமைக்கும் போது அதன் பச்சை நிறம் மாறாமல் சமைத்தால் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். 

விந்து குறைபாடு உள்ளவர்கள் அதிகமாக உணவில் கீரைகளை சேர்த்துகொண்டால் விந்து கெட்டியாகவும் மேலும் அதிகரிக்கவும் கீரை பெரிதும் உதவியாக இருக்கும். 

No comments:

Post a Comment

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...