கோவக்காயின் மருத்துவ குணங்கள் !!!
கோவக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்,கோவக்காய் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பச்சைகிளி ஏன் என்றால் நம்ம ஊரில் கோவக்காய் அதிகமாக கிளிகளுக்கு கொடுப்பார்கள் நன்கு பழுது சிவப்பு நிறம் வந்ததும் அந்த கோவப்பழத்தை அனைவரும் கிளிக்கு கொடுப்பார்கள்.
அதற்குமுன்பு இந்த கோவக்காயை பள்ளிகூடங்களில் எழுதுபலகை சுத்தம் செய்ய பயன்படுத்தினார்கள்.பெரும்பாலும் இந்த காய்களை கிளிகளுக்கும் மற்றும் பிளாக் போர்ட் பயன்படுத்தினார்கள்.இந்த கோவக்காயை அதிகம் சமைபவர்கள் மிகவும் குறைவு,ஆனால் வெளிமாநிலங்களில் அதிகம் சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.இருப்பினும் இதில் அதிக சத்துக்கள் உள்ளன.
கோவக்காயில் நமக்கு தரும் சத்துக்கள்:
கோவக்காயில் பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன மற்றும் இந்த கோவக்காயை நீரழிவு நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் நீரழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் இது பச்சை நிற காய்கறி என்பதால் நமக்கு பலவித நன்மைகள் தருகிறது.
இதில் வைட்டமின் A,கால்சியம்,பாஸ்பரஸ்,போலிக் ஆசிட்,அயன் இது போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்ப்பதால் நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்கிறது.அதுமட்டும் அல்லாமல் ஆரம்பநிலையில் உள்ள ஆஸ்துமாவை தடுக்க உதவியாக இருக்கிறது.
இந்த கோவக்காய் பாவக்காய் போன்று கசப்பு தன்மை இல்லாததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு சாப்பிடும் ஒன்றாக உள்ளது.கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதோடு இதில் அதிகம் நமக்கு தேவைப்படும் நார்சத்து உள்ளது.கோவக்காய் மட்டும் அல்லாமல் இதன் இலை,பூ,தண்டு,வேர் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை அதனால் கோவக்காய் அனைவரும் சமைத்து சாப்பிடுவது நல்லது.
இந்த கோவக்காய் பாவக்காய் போன்று கசப்பு தன்மை இல்லாததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு சாப்பிடும் ஒன்றாக உள்ளது.கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதோடு இதில் அதிகம் நமக்கு தேவைப்படும் நார்சத்து உள்ளது.கோவக்காய் மட்டும் அல்லாமல் இதன் இலை,பூ,தண்டு,வேர் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை அதனால் கோவக்காய் அனைவரும் சமைத்து சாப்பிடுவது நல்லது.
கோவக்காய் தரும் நன்மைகள்:
- கோவக்காய் அதிகம் உணவில் சேர்த்துகொள்வதால் மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது.
- தோளில் ஏற்படும் பிரச்சனை அதாவது தோல்நோய் வராமல் தடுத்து நிறுத்த உதவியாக இருக்கிறது.
- சக்கரைநோய் கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள உதவியாக இருக்கிறது.
- உடலுக்கு பளபளப்பை கொடுக்கும் அதிகமாக கோவக்காய் உணவில் சேர்ப்பதன் மூலம்.
- இது கோவக்காய் எளிதில் ஜீரணம் ஆவது கடினம் அதனால் இரவில் சேர்த்துகொள்ள வேண்டாம்.
- கோவக்காய் உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் வாயு,பித்தம்,போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கலாம்.
- இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு சாப்பிட்டால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நிற்கும்.
- இதனை சிலர் சாலட்டுடன் சேர்த்து சாப்பிடுவார்கள் அப்படி பச்சையாக சாப்பிடுவதால் இன்னும் கோவக்காயின் சத்து நேரடியாக கிடைக்கிறது.
- கோவக்காயை மென்று சாப்பிடுவதால் நாக்கில் ஏற்படும் புண்கள் சரியாகிவிடும் மற்றும் வாயிற்று புண் உள்ளவர்கள் கோவக்காய் சாப்பிட்டுவந்தால் புண் எளிதில் குணமாகும்.
- கோவக்காய் பச்சடி ஒரு சிறந்த மருத்துவகுணம் நிறைந்த ஒன்றுன்னு சொல்லலாம்.
கோவக்காய் நன்மைகள் தெரியாமல் பயன்படுத்துபவர்கள் இந்த அணைத்து நன்மைகளையும் தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.உணவிலே மருந்து இருக்கும்போது எதற்காக இங்கிலீஷ் மருந்து.
No comments:
Post a Comment