Rama Online Tamil: காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா ?

Monday, May 21, 2018

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா ?

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியமா ?


தண்ணீர் அனைவருக்கும் தேவையான ஒன்று உயிர் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.நாம் தினமும் தண்ணீர் குடிப்பது தவிர்கமுடியாதது ஆனாலும் பெரும்பாலான மக்கள் தண்ணீர் அதிகம் குடிப்பதில்லை,அதிகமாக குடிக்கவில்லை என்றாலும் ஒருநாளைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு தண்ணீராவது குடிக்க வேண்டும்.

சராசரியாக மனிதன் குறைந்தளவு 3-4 லிட்டர் தண்ணீர் தனது உடலுக்கு எடுத்துகொள்ளவேண்டும்,அப்படி எடுத்துகொள்ள வில்லை என்றால் நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பலவித பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

தண்ணீர் வெறும் தண்ணீர் மட்டும் அல்ல அது நமது உடலுக்கு எனர்ஜியை கொடுத்து நமது உடல் செயல்பட காரணமாக இருக்கிறது.உணவு ஒருவேளை சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருப்பது கடினம் அதிலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது.

ஆனாலும்,தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இன்னும் அதிக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நமக்கு பல வழிகளில் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன,அதிலும் காலையில் சிலர் வெந்நீர் குடித்தால் வயிறு குறையும் என்று வெந்நீர் குடிப்பார்கள் அதைவிட  சாதாரண பச்சைதண்ணீர்  குடிப்பது தான் நல்லது.

காலை எழுந்தவுடன் பல் சுத்தம் செய்துவிட்டு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது நின்றுகொண்டு குடிப்பதை விட உட்கார்ந்து குடித்தால் இன்னும் பலவித நன்மைகள் நமக்கு வந்து சேரும்.



தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

* தண்ணீர் காலையில் வெறும்வயிற்றில் தினமும் குடிப்பதால் நமக்கு எனர்ஜி கிடைப்பதோடு,தண்ணீர் உங்கள் வயிற்றை நிரப்பி மலம் முழுமையாக வெளியேற உதவுகிறது.

* தண்ணீர் ஒருவர் அதிகமாக குடிப்பதால் அடிக்கடி ஏற்படும் தலைவலி நிற்க உதவியாக இருக்கும்.

*தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் ரத்தம் சுத்தமாக வைத்துகொள்ள பெரிதும் உதவியாக இருக்கும். 

* சிறு பிள்ளைகளுக்கு தினமும் காலையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை சொல்லிகொடுக்க அது அவர்களது உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

* நமது மூளையில் அதிகம் தண்ணீர் இருப்பதால் மேலும் மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு தண்ணீர் அதிகமாக தேவைபடுவதால்  தண்ணீர் மிக அவசியம்.

No comments:

Post a Comment

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா?

இந்த ஹோண்டா பைக் பற்றி தெரியுமா? இந்த ஹோண்டா பைக் பார்க்க ரொம்பவே நல்லாருக்கும் இதன் வடிவம் கூட கொஞ்சம் வித்தியாசமானது அதனால் ஹோண்டா...