பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க !!!
பொதுவாகவே பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்பு இருக்கும் சாதாரணமாக இருக்கும் வயிறு குழந்தை பெற்றபின் தொப்பை ஏற்படுகிறது,இதை பெண்கள் குறைக்க எவ்வளவோ கஷ்டபடுகின்றனர்.அதிலும் இயற்கையாகவே நடக்கும் பிரசவத்தை விட சிசேரியன் செய்துகொள்பவர்களுக்கு அதிகமாகவே தொப்பை காணப்படுகிறது.
பெண்கள் கர்பமாக இருக்கும் சமயத்தில் அவர்கள் உடலுக்கு சத்து தேவைபடுவதால் அதிக சத்தான உணவுகள் மாத்திரைகள் சாப்பிடுகின்றனர் அப்படி சாப்பிடும்போது அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன,இதனால் பிரசவத்திற்கு பின்பும் அவர்கள் உடலில் அது பெரும் பிரசனையாக உருவெடுகிறது அப்படி ஒன்றுதான் தொப்பை.
இதற்காக உடலை குறைக்க பிரசவத்திற்கு பின் அதிக டயட் இருக்க கூடாத ஏன் என்றால் அவர்களுக்கு போதிய சத்துக்கள் உடலில் இருக்க வேண்டும்.அவர்கள் உடலை குறைக்க அதிக டயட்டில் இருந்தால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் அதனால் குறைவான டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் தொப்பையை குறைக்க செய்யலாம்.
மேலும் பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் என்பதால் சத்தான உணவை தேடி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது அதனால் உடல் பருமன் மேலும் அதிகமாக கூடும் இப்படி ஏற்படும் உடல் பருமனை உடனே குறைக்க நினைக்காமல் கொஞ்ச கொஞ்சமாக குறைப்பது நல்லது.
பெண்கள் பிரசவத்திற்கு பின் முறையான உணவு பழக்கவழக்கங்கள்,குறைவான டயட் மற்றும் தினமும் காலையில் தேவையான உடற்பயிற்சி கூடவே யோகசனம் செய்தல் நல்லது,மேலும் தொப்பையை குறைக்க பலவிதமான் யோகாசனம் உள்ளது.
தண்ணீர் அதிகமாக பருகவும்
உடல் எடை குறைக்க நினைபவர்கள் முதலில் தினந்தோறும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படி தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற தண்ணீர் உதவியாக இருக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
கொழுப்பு குறைந்த உணவு சாப்பிடவும்
பெண்கள் உடல் எடை குறைக்க நினைபவர்கள் கொழுப்பு அதிகம் இருக்கும் உணவை சாப்பிட கூடாது கொழுப்பு குறைந்த உணவு பொருளை சாப்பிடுவது நல்லது.
கால்சியம் உள்ள பால்
பிரசவத்திற்கு பின் பெண்கள் அதிகம் பால் எடுத்துகொள்வது நல்லது ஏன் என்றால் பெண்கள் தாய்பால் கொடுப்பதால் அவர்களுக்கு கால்சியம் நிறைந்த மாட்டுப்பால் மிகவும் அவசியம்.
பழங்கள்
உடல் எடை குறைக்க நினைக்கும் பெண்கள் பழங்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது மேலும் பழசாறு இன்னும் நல்லது அவர்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் மேலும் அவர்களுக்கு தேவையான வலிமையை கொடுக்கிறது.
No comments:
Post a Comment